சிம்புதேவன் இயக்கும் “நவோரியா” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

சிம்புதேவன் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புதேவன் இயக்கும் “நவோரியா” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
Published on: 

சிம்புதேவன் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கூடிய நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி சிம்புதேவனை தமிழின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் சேர்த்தது. ஆனால், அதன்பின் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய புலி, கசட தபற, போட் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

நவோரியா

நடிகர் விமலை வைத்து சிம்புதேவன் ‘நவோரியா’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இது டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. இப்படமும் அவரின் முந்தைய திரைப்படங்களைப் போல் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

இந்த நிலையில், சிம்புதேவனின் ‘நவோரியா’ திரைப்படம் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து வெளியிட உள்ளனர்.

X