இயக்குநராக முதல் தேசிய விருது - ’எண்ணம் போல் வாழ்க்கை’... தனுஷ் நெகிழ்ச்சி

தனுஷின் "ராயன்" சிறந்த தமிழ் படமாகவும், "கேப்டன் மில்லர்" படத்திற்காக அவருக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்
Published on

சென்னை,

இயக்குநராக முதல் தேசிய விருதை பெற்றதற்கு தனுஷ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய விருது

72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல திரைப்படங்களும், கலைஞர்களும் பல்வேறு பிரிவுகளில் தேசிய அளவிலான உயரிய அங்கீகாரத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

இயக்குநராக முதல் தேசிய விருது

இதில் தனுஷின் "ராயன்" சிறந்த தமிழ் படமாகவும், "கேப்டன் மில்லர்" படத்திற்காக அவருக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ள தனுஷ், "நடிகராக 3-வது விருதை விட, இயக்குநராக பெற்ற முதல் தேசிய விருது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆசீர்வாதம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணம் போல் வாழ்க்கை

தனது வெற்றியை ரசிகர்களுக்கும், ஆதரவளித்த ஊடகங்களுக்கும் சமர்ப்பித்த அவர், "எண்ணம் போல் வாழ்க்கை" என ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் நன்றியை பகிர்ந்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com