கிரிஷ் ஏடி இயக்கும் 'பிரேமலு 2' திரைப்படத்தின் அப்டேட்


கிரிஷ் ஏடி இயக்கும் பிரேமலு 2 திரைப்படத்தின் அப்டேட்
x

‘பிரேமலு 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,

இந்த ஆண்டின் மிகப்பெரிய லாபம் ஈட்டிய படமாக நட்சத்திரங்கள் இல்லாத 'பிரேமலு' உள்ளது. காதல், நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ.136 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த வசூல் பெரிதாக தெரியவில்லை என்றாலும், படத்தில் எந்த ஒரு நட்சத்திரங்களும் இல்லாமல், புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதன் பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிக லாபத்தை பெற்றிருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தற்போது இப்படம் ஆஹா ஓ.டி.டி தளத்தில் தெலுங்கிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம் மற்றும் இந்தியில் உள்ளது.

இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, 2-ம் பாகத்தை படக்குழு அறிவித்தது. அதனுடன் இப்படம் இந்த வருடம் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிரேமலு 2 குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் திரைப்படத்தை இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்போவதாகவும் படத்தில் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

1 More update

Next Story