'பென்ஸ்' படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர்

பென்ஸ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'பென்ஸ்' படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர்
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பென்ஸ்'. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில் மலையாள நடிகர் நிவின் பாலி 'பென்ஸ்' திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பேட்டியில் ஒன்றில் கலந்து கொண்ட பென்ஸ் பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, "இப்படத்தில் படத்தில் மூன்று கதாநாயகிகள் இருப்பார்கள். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று பெற்று வருகிறது. விரையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மங்களூர், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com