ராஜமவுலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்

ராஜமவுலி இயக்கும் ‘எஸ்எஸ்எம்பி 29’ படத்தின் முக்கிய அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகிறது.
ராஜமவுலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்
Published on

ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்எஸ்எம்பி 29' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே உள்ளது. இப்படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது. இதில் பிருத்வி ராஜ், பிரியங்கா ஜோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

அந்த வகையில், மகேஷ் பாபுவின் பிறந்தநாளையொட்டி எஸ்எஸ்எம்பி 29 படத்தின் அப்டேட்டை இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டார். அதில், கிளிம்ப்ஸ் புகைப்படத்தை வெளியிட்டு, படத்தின் முக்கிய அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவித்தார்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மை கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல கோடி ரூபாயில் அவர் அமைத்த பிரம்மாண்ட செட் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டரை நவம்பர் மாதம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தைப் பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன் அவர் இயக்கிய அவதார் 3 படத்தின் புரமோஷனுக்காக இந்தியா வருகிறார். அப்போது, ராஜமவுலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com