இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி

இயக்குநர் ஜித்து மாதவனின் மனைவி ஷபினா பபின் பாக்கர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி
Published on

ரோமஞ்சம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன், நடிகர் பகத் பாசிலை வைத்து ஆவேஷம் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.150 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. தற்போது, நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை ஜித்து மாதவன் இயக்கி வருகிறார்.இப்படத்தில் சூர்யாவுடன், பிரேமலு ஹீரோ நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ஜித்து மாதவனின் மனைவி ஷபினா பபின் பாக்கர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com