மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு

அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் பிரேமம் படம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அதை முறியடித்துள்ளது மஞ்சும்மல் பாய்ஸ்.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு
Published on

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில்ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் "மஞ்சும்மல் பாய்ஸ்" வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் அற்புதமாக இருக்கிறது, என்ன ஒரு சிறப்பான படம். மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்தப் படத்தின் திரையரங்க அனுபவத்தை தயவு செய்து தவற விட்டுவிடாதீர்கள். சிதம்பரம், சௌபின் ஷாஹிர், சுஷின் ஷ்யாம் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com