

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்து வருகின்றனர்.
தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குநகர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் வெளியான பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்பட பல்வேற் வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நேற்று சாமி தரிசனம் செய்தார். அவர் தனது மனைவியுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.