'தக் லைப்' படத்தை பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்


தக் லைப் படத்தை பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
x

தக் லைப் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான 'தக் லைப்' திரைப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று முன்தினம் வெளியான இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் செய்திருக்கிறது. அதாவது, இப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தக் லைப் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "தக் லைப் படத்தில் ஓஜி மணி சாரின் வைபை பல காட்சிகளில் பார்த்து சிலிர்த்துப் போய்விட்டேன். படத்தில் கமல் சாரின் மாஸ்டர் கிளாஸ் தெரிந்தது. சிம்பு செம வெறித்தனமான நடிப்பு மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பும் அபாரமாக இருந்தது. ஏ.ஆர் ரகுமானும் ஒளிப்பதிவாளரும் தங்களின் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கின்றனர். வாழ்த்துக்கள்" என படத்தை பாராட்டியுள்ளார்.

1 More update

Next Story