

இயக்குநர் ஞானவேல் ராஜா ‘மொத ராத்திரி’ படத்தை ‘நகைச்சுவை விருந்து’ என்று பாராட்டியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
புதிதாகத் திருமணமான ஒரு ஜோடியின் வாழ்க்கையில் நடைபெறும் காதல் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‘மொத ராத்திரி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியான ‘மொத ராத்திரி’ படம் முதல் 3 நாட்களில் ரூ.70 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.
‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டி இயக்குநர் ’ஞானவேல் ராஜா’ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திருமண வீடுகளில் நடைபெறும் அபத்தங்களை தோலுரித்துக் காட்டும் வகையில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் நகைச்சுவையுடன் பல்வேறு விஷயங்களை திரைப்படம் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திறமையான கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாக பாராட்டு தெரிவித்தார். திரைப்படத்தைப் போலவே அதன் இயக்குனர் ராஜா கருப்பசாமியின் நேர்காணல்களும் தன்னை கவர்ந்துள்ளது. மேலும், “ராஜா கருப்பசாமி தமிழ் சினிமாவுக்கு நல்வரவு மட்டுமல்ல நம்பிக்கை வரவு” என்றும் இயக்குனர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.