கனிமொழி எம்.பி.யுடன் இயக்குனர் லிங்குசாமி சந்திப்பு

இயக்குனர் லிங்குசாமி மக்களவை உறுப்பினர் கனிமொழியை நேரில் சந்தித்துள்ளார்.
கனிமொழி எம்.பி.யுடன் இயக்குனர் லிங்குசாமி சந்திப்பு
Published on

சென்னை,

'ஆனந்தம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி 2, வாரியர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் அறிவுமதியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களை சந்தித்தது மிகவும் பெருமையான தருணம் என லிங்குசாமி அதில் குறிப்பிட்டுள்ளார்.

Such a honour to meet you @KanimozhiDMK mam with arivumathi annan. Such a great time it was & thanking you for sharing your valuable time with us mam. pic.twitter.com/7WJ8gFgdW1

Lingusamy (@dirlingusamy) June 6, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com