முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
CM Vijay
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் வென்று விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். நேரில் சந்தித்தும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது. விஜய் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால், திரைத்துறையில் அவருடன் நெருங்கி பழகிய இயக்குனர்கள், சக நடிகர்கள் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Director Lokesh Kanagaraj

நடிகர் அர்ஜுன் முதல்-அமைச்சர் விஜய்யை சமீபத்தில் சந்தித்தார். அவரை தொடர்ந்து நடிகை குஷ்பு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் முதல்-அமைச்சர் விஜய்யை நேற்று சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, ‘வாழ்த்துகள் அண்ணா’ என்று பதிவிட்டுள்ளார். இவர் விஜய்யின்‘மாஸ்டர்’, ‘லியோ’ படங்களை இயக்கியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com