துருவ் விக்ரமின் "பைசன்" ரிலீஸ் அப்டேட்


துருவ் விக்ரமின் பைசன் ரிலீஸ் அப்டேட்
x
தினத்தந்தி 8 April 2025 8:55 PM IST (Updated: 3 May 2025 6:31 PM IST)
t-max-icont-min-icon

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்', மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். .

இதைத் தொடர்ந்து 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பைசன் காளமாடன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இதன் படப்பிடிப்புகளும் ஏற்கனவே நிறைவடைந்து. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை வருகின்ற மே மாதம் 16ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story