திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் சந்திப்பு

கடந்த சில நாட்களாக திரைத்துறையை சேர்ந்த பலரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன்  இயக்குனர் மாரி செல்வராஜ் சந்திப்பு
Published on

சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில நாட்களாக திரைத்துறையை சேர்ந்த பலரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்கள். நேற்று கமல்ஹாசன் சந்தித்து பேசிய நிலையில் இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் சந்தித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் மாரி செல்வராஜ் பதிவிட்டு இருப்பதாவது:

"பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com