“ஹாப்பி ராஜ்” படக்குழுவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ள ‘ஹாப்பி ராஜ்’ படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
“ஹாப்பி ராஜ்” படக்குழுவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக் வெளியான படம் 'பிளாக்மெயில்'. மு.மாறன் இயக்கிய இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜிவி பிரகாஷ் ‘ஹாப்பி ராஜ்’ படம் நேற்று வெளியானது. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இதில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கெளரி பிரியா நடித்துள்ளார்.

இந்நிலையில், ‘ஹாப்பி ராஜ்’ படத்தை பாராட்டி இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “‘ஹாப்பி ராஜ்’ மூலம் நல்ல கதைக்குள் ஒரு அணிலை போல துள்ளி குதித்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ். ‘குதிரைமுட்டை’ என்ற கேலி வார்த்தையையும் அதன் வலியையும் ஏற்று நடித்திருந்த ஜார்ஜ் மரியனின் இருப்பும் சிரிப்பும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. வெறும் கொண்டாட்டமும் குதூகலமும் மட்டுமே நிரப்பப்பட்டு வருகிற இன்னொரு சினிமாவாக இருக்கும் என்ற என் எண்ணத்தை உடைத்து நொறுக்கிய உணர்ச்சிமிக்க படைப்பாகவும் இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com