“மயிலா” படத்தின் டீசரை வெளியிட்ட மாரி செல்வராஜ்

“மயிலா” படத்தின் டீசரை வெளியிட்ட மாரி செல்வராஜ்

பெண்களின் வலிமை, மன உறுதியை பாராட்டும் விதமாக மகளிர் தினமான இன்று ‘மயிலா’ படத்தின் டீசரை மாரி செல்வராஜ் வெளியிட்டார்.
Published on

இயக்குநர் பா. ரஞ்சித்தின் “நீலம் புரோடக்ஷன்ஸ்" நிறுவனம் வழங்கும் செம்மலர் அன்னம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மயிலா’. இப்படத்தில், நடிகர்கள் பி. மெலடி டோர்காஸ், சுடர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நியூட்டன் சினிமா நிறுவனத்தின் கீழ் ஆண்டோ சிட்டிலப்பில்லி தயாரித்துள்ளார்.

அம்மணி, மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், சில்லுக் கருப்பட்டி, வலிமை, கள்வன், ஆயிரம் பொற்காசுகள், குரங்கு பொம்மை, யாத்திசை, மாவீரன், அயலான், அந்தகன் எனத் தொடர்ந்து தன் யதார்த்தமான நடிப்பால் ரசிக்கர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் நடிகை செம்மலர் அன்னம். இயக்குநராக வேண்டும் என்றக் கனவுடன் சென்னைக்கு வந்தவர், நடிக்கத் தொடங்கி, நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள “மயிலா”, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது. இந்தப் பார்வையின் மூலம், குடும்பங்களையும் சமூகங்களையும் அமைதியாக வடிவமைக்கும் பெண்களின் வாழ்வியலை இப்படம் வெளிப்படுத்துகிறது.

நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் 2026ஆம் ஆண்டுக்கான ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில், ஆசிய நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் திரைப்படங்களுக்கு நெட்பாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘மயிலா’ படத்தின் டீசரை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com