மேக்னா இயக்கும் “ரேகாஸ் கபடி குழு” படத்தின் பூஜை

கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ‘ரேகாஸ் கபடி குழு’ படத்தில் நட்டி நட்ராஜ், ரேஷ்மா ஆகியோருடன் மேக்னாவும் நடிக்கிறார்.
மேக்னா இயக்கும்  “ரேகாஸ் கபடி குழு” படத்தின் பூஜை
Published on

சுதா கொங்கரா, கிருத்திகா உதயநிதி, ஐஸ் வர்யா, காயத்ரி புஷ்கர், ஹலீதா ஷமீம், லட்சுமி ராமகிருஷ்ணன், சவுந்தர்யா ரஜினிகாந்த் என பெண் இயக்குனர் பட்டியலில் இடம்பிடித்தவர் மேக்னா. 'மலேசியாவில் 999', 'ஹார்பர்', 'லக்கி நன்' ஆகிய படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். ‘டி.வி.கே’ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.

தற்போது ‘ரேகாஸ் கபடி குழு’ என்ற புதிய படத்தை அவர் இயக்குகிறார். மேலும் மேக்னாஸ் வேற மாதிரி புரொடக்சன்ஸ் மற்றும் மிராக்கிள் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கவும் செய்கிறார்.

கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ், மூணாறு ரமேஷ். டி.எஸ்.கே., தேனப்பன், வினோத். ரேஷ்மா ஆகியோருடன் மேக்னாவும் நடிக்கிறார். தமிழகம் தாண்டி இந்தோனேசியாவிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், மேக்னா இயக்கும் ‘ரேகாஸ் கபடி குழு’ படத்தின் பூஜை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com