“சுள்ளான் சேது” படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு


“சுள்ளான் சேது” படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2025 3:10 PM IST (Updated: 25 Aug 2025 7:54 PM IST)
t-max-icont-min-icon

இயக்குநர் முத்தையா மகன் விஜய் நடித்த ‘சுள்ளான் சேது’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் முத்தையா. இவர், கொம்பன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம், மருது, கொடிவீரன், விருமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், முத்தையா மீது சாதிய படங்களை இயக்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

தற்போது, இயக்குநர் முத்தையா இயக்கும் புதிய படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு சுள்ளான் சேது என தலைப்பு வைத்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் சமுத்திரகனி மற்றும் பிரிகிடா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி படத்தின் டீசர் வரும் 27ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story