இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குனர் மிஷ்கின் - முதல் பாடல் வெளியீடு

‘டெவில்’ படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குனர் மிஷ்கின் - முதல் பாடல் வெளியீடு
Published on

சென்னை,

'சவரக்கத்தி' படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் 'டெவில்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார்.

மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள 'டெவில்' படத்தின் முதல் பாடலான 'கலவி' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sony Music South (@SonyMusicSouth) June 29, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com