மறைந்த சண்டை பயிற்சியாளர் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்ற வேட்டுவம் படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
மறைந்த சண்டை பயிற்சியாளர் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவி
Published on

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா மற்றும் கலையரசன் போன்ற திரை நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினத்தில் நடந்துவந்த நிலையில், கடந்த 13ம் தேதி சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது என இயக்குநர் பா. ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய நான்கு பேர் மீது 3 பிரிவுகளில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மோகன் ராஜ் இறப்பு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது குடும்பத்திற்கு திரைத்துறையினர் பலரும் பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு அவரது குடும்பத்திற்கு ரூ1 லட்சம் நிதியுதவி வழங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் 'வேட்டுவம்' படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ் ரூ20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com