'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அப்டேட் பகிர்ந்த இயக்குனர் பா. ரஞ்சித்

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் திரைக்கதை குறித்த சுவாரசியமான தகவலை இயக்குனர் பா.ரஞ்சித் விழா ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அப்டேட் பகிர்ந்த இயக்குனர் பா. ரஞ்சித்
Published on

சென்னை,

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை'இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்சன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்க உள்ளதாக நடிகர் ஆர்யா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது துணை இயக்குநர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: 'இப்போதுதான் 'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் இறுதிக் காட்சியை எழுதி முடித்தேன். ஒரு படத்தினை எழுதி முடிப்பதுபோல் மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவுமில்லை. ஏற்கனவே திரைக்கதை ஆசிரியர் தமிழ்ப் பிரபா இதன் திரைக்கதையை ஒரு முறை எழுதிவிட்டார். நான் எனது பாணியில் மீண்டும் ஒருமுறை இதனை எழுதிப் பார்த்தேன். ஒரு இடத்தில் வந்து நின்றுள்ளது. எழுதும்போது எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் துணை இயக்குநர் அவருடைய புத்தகத்தை முடித்ததும் அவர் முகத்திலும் இருந்ததைப் பார்த்தேன்' என்றார்.

சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com