திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“இந்திய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் அரசியல் ஆளுமை, பெரும் மதிப்புக்குறிய தலைவர், அண்ணன் திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்❤️?” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித், தனது ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு கதைக்களத்தில் அரசியலை மையமாக வைத்து படம் இயக்கி வருகிறார். கபாலி, காலா, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை, தங்கலான் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் பா.ரஞ்சித்.






