பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

பாண்டிராஜ் இயக்கும் ‘பரிமளா & கோ’ படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு நடித்துள்ளார்கள்.
பாண்டிராஜ் இயக்கும்  புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
Published on

‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ் வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது.

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மிகுந்த நகைச்சுவையை உருவாக்கும் விதத்தில் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. லைகா, தமிழ்க்குமரன், பசங்க புரடக்ஷனில் தயாராகியிருக்கும் இந்தப் படத்துக்கு ‘பரிமளா & கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com