'திரிஷ்யம் 3' படத்தின் மூன்று வெர்ஷன்களையும் ஒரே தேதியில் வெளியிட இயக்குனர் திட்டம்

'திரிஷ்யம் 3' படத்தின் மூன்று வெர்ஷன்களையும் ஒரே தேதியில் வெளியிட இயக்குனர் திட்டம்

இயக்குனர் ஜீத்து ஜோசப் 'திரிஷ்யம் 3' படத்திற்கான படப்பிடிப்பு பணியை அக்டோபர் மாதம் துவங்க உள்ளார்.
Published on

சென்னை,

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மலையாளத்தில் படம் 'திரிஷ்யம்'. இந்த படத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தின் வெற்றி தொடர்ந்து இரண்டாம் பாகமும் (திரிஷ்யம் 2) வெளியானது. திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இப்படத்தின் மூன்றாம் பாகமான 'திரிஷ்யம் 3' படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் துவங்கும் என்று ஜீத்து ஜோசப் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் பேட்டி ஒன்றில், கலந்து கொண்ட இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3 படத்தின் 3 ஷெர்ஷன்களும் ஒரே தேதியில் வெளியிட உள்ளதாக கூறினார். அதவாது,"கதை முடிவானதும் தெலுங்கு, இந்தி படக்குழுவிடம் கொடுத்துவிடுவேன். அதில் தேவையான மாற்றங்களை செய்து அவர்கள் எடுப்பார்கள். வர்த்தக ரீதியில் பாதிப்பு அடையாமல் இருக்க, ஒரே தேதியில் 3 வெர்ஷன்களையும் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com