‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' படத்திற்கான அப்டேட் கொடுத்த இயக்குனர் பொன்ராம்

இயக்குனர் பொன்ராம் தற்போது ‘கொம்புசீவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சென்னை,
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இது குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், இயக்குனர் பொன்ராம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' படத்திற்கான அப்பேட் கொடுத்துள்ளார். அதாவது, ‘‘நான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் 2-ம் பாகத்தை நிச்சயம் எடுப்பேன். அது சவாலான விஷயமும் கூட. அப்படத்தை எடுக்க முடியாது என பலர் கூறுகின்றனர். எடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்'', என்று கூறியுள்ளார்.
இவர் தற்போது, சரத்குமார், சண்முக பாண்டியனை வைத்து ‘கொம்புசீவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






