'அம்பிகாபதி' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மாற்றம்- இயக்குனர் எதிர்ப்பு


அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மாற்றம்- இயக்குனர் எதிர்ப்பு
x

தனுசின் பிறந்தநாளையொட்டி, ‘அம்பிகாபதி' படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

மும்பை,

இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் நடித்த 'ராஞ்சனா' படம் 2013-ம் ஆண்டில் வெளியாகி 'ஹிட்' அடித்தது. இப்படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியானது.

தனுசின் பிறந்தநாளையொட்டி, 12 ஆண்டுகளுக்கு பிறகு 'அம்பிகாபதி' படம் மீண்டும் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் 'கிளைமேக்ஸ்' காட்சி மாற்றப்பட்டிருந்தது. அதற்கு, இயக்குனர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதற்கு தயாரிப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது. ஈரோஸ் மீடியா வேர்ல்ட் குழும தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி கூறும்போது, 'அம்பிகாபதி' படத்தின் முழுமையான பதிப்புரிமை மற்றும் தயாரிப்பு உரிமை எங்களிடம் உள்ளது. ஏ.ஐ. வசதி மூலமாக படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்துள்ளோம்.

இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, கலையின் புதிய வடிவம். உலக சினிமாவில் இது போன்ற மாற்றுப் பதிப்புகள் வழக்கம்தான். புதிய 'கிளைமேக்ஸ்' உடன் படம் வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story