ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு வெளியீடு


ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு வெளியீடு
x
தினத்தந்தி 20 Jan 2025 11:09 AM IST (Updated: 1 Feb 2025 7:33 AM IST)
t-max-icont-min-icon

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்து வரும் படத்துக்கு 'பறந்து போ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

சென்னை,

பிரபல இயக்குனர் ராம் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.

இப்படத்தினை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப விண்ணப்பித்திருக்கிறார்கள். அதன்மூலம் இந்த தகவல் இணையத்தில் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது. முழுக்க காமெடி பின்னணியில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ராம்.

ஒரு பிடிவாதமாக இருக்கும் சிறுவனுக்கும் பணம் கஷ்டத்தில் இருக்கும் அவனது தந்தைக்கும் ஒரு பயணத்தின் போது இருவரும் சந்திக்கும் மனிதர்களின் மூலம் வாழ்க்கையை புரிந்துக் கொள்ளும் சூழல் ஏற்டுகிறது. இதனை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் தற்பொழுது நடைப்பெற்று வரும் சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

1 More update

Next Story