

படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் தொடங்கியது. இதில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கற்றது தமிழ், பேரன்பு ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில், அஞ்சலி நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில், முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். தரமான கதையம்சம் உள்ள படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற டைரக்டர் ராம், இந்த படத்துக்காகவும் தேசிய விருதை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார்கள் படக்குழுவினர்.