டைரக்டர் ராம்கோபால் வர்மா கைது ஆவாரா?

பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ என்ற படத்தை இயக்கி தயாரித்தார்.
டைரக்டர் ராம்கோபால் வர்மா கைது ஆவாரா?
Published on

பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இதில் வெளிநாட்டு ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். இந்த படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் படம் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் 40-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் ராம்கோபால் வர்மா மீது புகார்கள் அளிக்கப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கோபால் வர்மா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து ஐதராபாத் குற்றப்பிரிவு போலீசில் ராம்கோபால் வர்மா ஆஜரானார். அவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அவருடைய மொபைல் போன், லேப்-டாப்பையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிறகு ராம்கோபால் வர்மா கைது செய்யப்படலாம் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் கைது குறித்து போலீஸ் தரப்பில் உறுதிபடுத்தவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com