இயக்குநர் ராமின் “ஏழுகடல் ஏழுமலை” படத்தின் ரிலீஸ் அப்டேட்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் ராமின் “ஏழுகடல் ஏழுமலை” படத்தின் ரிலீஸ் அப்டேட்
Published on

பிரபல இயக்குனர் ராம் எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர். இவர் ‘கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஏழுகடல் ஏழுமலை’. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் நிறைய விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் மூலமாக உருவாக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் ரிலீஸிக்கு தயாரானாலும் வணிக காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும், ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அந்த இரண்டு விழாக்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.

இந்த நிலையில், ‘ஏழுகடல் ஏழுமலை’ படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமத்தை கோல்டன் ஸ்பாரோ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com