சூர்யாவின் “கருப்பு” பட ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி

சூர்யாவின் ‘கருப்பு’ படம் கோடைக்காலத்தில் வெளியாகுமென இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.
சூர்யாவின் “கருப்பு” பட ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி
Published on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கொடுத்துள்ளார். ஆர்.ஜே பாலாஜி “தேர்தல் முடிந்த பிறகு கோடைக்காலத்தில் நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ படம் ரிலீஸாகும். குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். ‘வலிமை’ அப்டேட் போல கடந்த ஓராண்டாக எல்லாரும் ‘கருப்பு’ அப்டேட் கேட்டுட்டு இருக்காங்க” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com