“கருப்பு” திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும் - ஆர்ஜே பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகவுள்ளது.
“கருப்பு” திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும் - ஆர்ஜே பாலாஜி
Published on

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் மே 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி ஸ்பெஷலாக கருப்பு படத்தின் முதல் பாடலான ‘காட் மோட்’ பாடல் வெளியாகி வைரலானது. ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியிடப்பட்டது. ‘ராத்து ராசன்’ பாடல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியானது

இந்நிலையில், இயக்குநர் ஆர்ஜே பாலாஜி “கருப்பு திரைப்படம் படையப்பா, முத்து, கில்லி போல் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கலாம். நான் கல்லூரியில் படிக்கும்போது தொடர்ந்து சூர்யாவின் வெற்றிப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அப்படங்களுக்கு டிக்கெட் கூட கிடைக்காமல் இருந்த எனக்கு அவரை வைத்தே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரிய ஆசிர்வாதம்தான்” என தெரிவித்துள்ளார்.

விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com