பிரபல மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார்

மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சங்கீத் சிவன் (61) காலமானார்.
image courtecy: instagram@sangeethsivan
image courtecy: instagram@sangeethsivan
Published on

மும்பை,

பிரபல மலையாள இயக்குனர் சங்கீத் சிவன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று சங்கீத் சிவன் (61) காலமானார். மறைந்த இயக்குனர் சங்கீத் சிவன், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.

சங்கீத் சிவன் மலையாளம் மற்றும் இந்தியில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1992 ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'யோதா' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் சங்கீத் சிவன் பிரபலமானார்.

இவர் பாலிவுட்டில் இயக்கிய முதல் படம் 'சோர்' . இப்படத்தில் சன்னி தியோல் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், 'கியா கூல் ஹை ஹம்' , 'யாம்லா பக்லா தீவானா 2' போன்ற இந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com