

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரியின் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த இணையத் தொடரில், துஷாரா விஜயன், அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
உலகெங்கிலும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழில் வெளியாகும். இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் வெளிவரும். பரபரப்பு திருப்பங்கள் நிறைந்த நாடகமாக உருவாகியுள்ள எக்ஸாம் இணையத் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. இதுமட்டுமின்றி ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் சப் டைட்டில்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. 7 எபிஸோடுகள் உடைய ‘எக்ஸாம்’ வெப் தொடர் மே 15ம் தேதி முதல் வெளியாகிறது.
அமேசான் பிரைம் இந்தியாவின் தலைவர் மற்றும் இயக்குநரான நிகில் மோதக் “‘எக்ஸாம்’ என்பது, போட்டித் தேர்வுகளின் உணர்ச்சித் தீவிரத்தை மிகத் திறமையாகப் படம்பிடித்து, அதை ஒரு விறுவிறுப்பான, பெரும் சவால்கள் நிறைந்த நாடகமாக மாற்றியமைக்கும், ஒரு சிறந்த கதையாகும். இக்கதை கோடிக்கணக்கான மக்களின் மனதில் ஆழமாகப் பதியும் என்று நாங்கள் நம்புகிறோம். சுழல் சீசன் 1 மற்றும் 2, மற்றும் வதந்தி ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் காயத்ரியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எங்களுக்குக் கிடைத்த ஒரு பாக்கியம். இந்தக் கதையை மே 15 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.