புதுப்பேட்டை 2 படத்திற்கான கதையை திருத்தி ரிவைஸ் செய்து வருவதாக இயக்குநர் செல்வராகவன் பதிவு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ‘புதுப்பேட்டை 2’ திரைப்படத்தின் கதையை இயக்குநர் செல்வராகவன் மீண்டும் திருத்தி வருவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
புதுப்பேட்டை 2 படத்திற்கான கதையை திருத்தி ரிவைஸ் செய்து வருவதாக இயக்குநர் செல்வராகவன் பதிவு
Published on: 

சென்னை,

கடந்த 2026-ம் ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் திரைக்கதை மற்றும் எழுத்துப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘புதுப்பேட்டை 2’ படத்தின் கதையை மீண்டும் திருத்தி வருவதாக செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘கொக்கி குமார்’ தனுஷ்

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புதுப்பேட்டை’. இதில் தனுஷ் ‘கொக்கி குமார்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், ‘புதுப்பேட்டை’ திரைப்படம் தனுஷ் ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, கொக்கி குமார் கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது. இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாக இருந்து வருகிறது.

திரைக்கதைப் பணிகள் நிறைவு

ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, ‘புதுப்பேட்டை 2’ படத்துக்கான கதை மற்றும் திரைக்கதைப் பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். கடந்த 2026-ம் ஆண்டு மார்ச் மாதம், இப்படத்தின் திரைக்கதை மற்றும் எழுத்துப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

மீண்டும் திருத்தும் செல்வராகவன்

இந்த நிலையில், ‘புதுப்பேட்டை 2’ படத்தின் கதையை மீண்டும் திருத்தி வருவதாக செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டாம் பாகத்தில் கொக்கி குமார் கதாபாத்திரம் எவ்வாறு வடிவமைக்கப்பட உள்ளது, முதல் பாகத்தின் கதையுடன் எந்த வகையில் தொடர்புபடுத்தப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com