'புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்' - இயக்குனர் செல்வராகவனின் பதிவு வைரல்

இந்த நொடிதான் பிறந்ததுபோல் நினைத்துக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
image courtecy:twitter@selvaraghavan
image courtecy:twitter@selvaraghavan
Published on

சென்னை,

தமிழ் சினிமா ரசிகர்களால் கெண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவர், தான் இயக்கிய படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

திரையில் அவருக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதேபோல் அவரின் தத்துவ பதிவுகளுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. திடீரென தனது எக்ஸ் பக்கத்தில் தத்துவங்களை பதிவிட்டுச் செல்வார்.

அந்த வகையில் தற்போது தத்துவம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அந்த பதிவில்,

ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்ததுபோல் நினைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com