

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘இந்தியன் 2, கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவியது. ஷங்கர் இயக்கத்தில் கமல், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் படுதோல்வியை தழுவியது. அனிருத்தின் பின்னணி இசையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்படத்தால் லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டமே ஏற்பட்டது. மேலும், ஓடிடி தளத்திலும் வெளியாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தற்போது ஷங்கர் மிகப்பெரிய வெற்றி படத்தை தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் ஷங்கரின் கனவுப்படமான ‘வேள்பாரி’ படத்தை அடுத்து உருவாக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஷங்கர் உள்ளார்.
‘இந்தியன் 2’ தோல்வியால் 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த ‘இந்தியன் 3’ கிடப்பில் போடப்பட்டது. ஒருவேளை ‘வேள்பாரி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு ‘இந்தியன் 3’ படப்பிடிப்பு முடித்து தரவேண்டும் என லைகா நிறுவனம் வந்து நின்றால் என்ன பண்ணுவது என்பதை சிந்தித்து இப்போது லைகா நிறுவனத்திடம்‘இந்தியன் 3’ படப்பிடிப்பை நான் முடித்து தரவேண்டும் என்றால் மூன்று மாதங்கள் கால அவகாசம். அதற்குள் நீங்கள் ஏற்பாடு செய்தால் நான் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து தருகிறேன். இல்லையெனில் ‘வேள்பாரி’ படத்தை முடித்து பிறகு தான் வர முடியும் என தெளிவாக கூறியுள்ளார் என தகவல் பரவி வருகிறது.