ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநரான ஷங்கர் மகன் அர்ஜித்!

இயக்குநர் ஷங்கரின் மகன் ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநரான ஷங்கர் மகன் அர்ஜித்!
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படுபவர் ஷங்கர். ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் அடுத்தடுத்து காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் என வரிசையாக பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தலைசிறந்த இயக்குனராக கொண்டாடப்பட்டார்.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த்த வணிக வெற்றியையும் நல்ல விமர்சனங்களையும் பெறாதாது ஷங்கருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.அடுத்ததாக, 'இந்தியன் - 3' திரைக்கு வரவுள்ளது. தொடர்ந்து, ஷங்கர் வேள்பாரி நாவலை இயக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

இயக்குநர் ஷங்கர் குடும்பத்திலிருந்து அவரது மகள் அதிதி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் இதுவரை விருமன், மாவீரன், நேசிப்பாயா ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் ஷங்கர் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டுள்ளார். ஏ. ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் 'மதராஸி' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதை படத்தின் போஸ்டரை வெளியிட்டு அர்ஜித் உறுதி செய்துள்ளார். நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகன்கள் நடிப்பைத் தேர்ந்தெடுக்காமல் இயக்குநர் பாதையைத் தேர்ந்தெடுத்தது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com