அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது

கமல் ஹாசன் வரும் நவம்பர் 7ம் தேதி தனது 72 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது
Published on: 

அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படம் உருவாகி வருகின்றது. தமிழ் திரையுலகின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே படத்தில் இணைவதால், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இந்த படத்தில் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் படத்தை இயக்கும் அருண் குமார்

கமல் ஹாசன் தயாரித்து நாயகனாக நடிக்கும் மற்றொரு புதிய படத்தை, இயக்குநர் சு. அருண் குமார் இயக்குகின்றார். இவர் சித்தா, வீரதீர சூரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

படத்தின் டைட்டில் வெளியீடு

இந்நிலையில், அருண் குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பெயரில் புதிய படத்தில் நடிக்கிறார்

சண்டியர் - விருமாண்டி

கமல் இயக்கி நடித்த ‘விருமாண்டி’ திரைப்படம் கடந்த 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்தப் படத்துக்கு முன்னதாக வைக்கப்பட்ட டைட்டில் ‘சண்டியர்’. ஆனால், அந்தத் தலைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அப்போது எதிர்ப்பு தெரிவித்தார். ‘சண்டியர்’ தலைப்பு சர்ச்சை காரணமாக ‘விருமாண்டி’ எனப் பெயர் மாற்றியிருந்தார் கமல்.

கமல் ஹாசனின் 72 ஆவது பிறந்த நாள்

நடிகர் கமல் ஹாசன் வரும் 7ம் தேதி தனது 72 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள நிலையில், இந்தப் புதிய படத்தின் அப்டேட் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

X