சுசீந்திரன் இயக்கத்தில் 5 மொழிகளில் தயாராகும் படம்

சுசீந்திரன் இயக்கத்தில், இமான் இசையில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் 5 மொழிகளில் தயாராகும் படம்
Published on

வெண்ணிலா கபடிக்குழு, பாண்டிநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை டைரக்டு செய்த சுசீந்திரன், அடுத்து இயக்கும் புதிய படத்துக்கு, வள்ளி மயில் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் சத்யராஜ், பாரதிராஜா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள்.

ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ஜதி ரத்னலு என்ற தெலுங்கு படத்தில் நடித்த பரியா அப்துல்லா, வள்ளி மயில் ஆக நடிக்கிறார். புஷ்பா புகழ் சுனில், தம்பி ராமய்யா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் கதை 1980-களில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com