

சென்னை,
'வெயில்', 'அங்காடித்தெரு', 'அரவாண்', 'காவியத்தலைவன்', 'ஜெயில்' ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்ததாக 'அநீதி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது.
'அநீதி' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், 'அநீதி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இந்த படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Arjun Das (@iam_arjundas) June 20, 2023 ">Also Read: