போதை மருந்து கொடுத்த இயக்குனர் - பிரபல நடிகை புகார்

போதை மருந்து கொடுத்த இயக்குனர் - பிரபல நடிகை புகார்
Published on

நடிகைகள் 'மீ டூ'வில் பாலியல் தொல்லை அனுபவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை ரத்தன் ராஜ்புத் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று ரத்தன் ராஜ்புத் பேசும்போது, "நான் ஒரு படத்தில் நடிக்க நடிகை தேர்வு நடப்பதை அறிந்து ஓஷிவாரா பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றேன். எனது ஆண் நண்பரும் உடன் வந்தார். எனது நடிப்பை புகைப்படம் எடுத்த இயக்குனர் நன்றாக நடித்தீர்கள்" என்றார்.

அப்போது எனக்கு குளிர்பானம் வழங்கினர். நான் ஒரு மடக்கு மட்டுமே குடித்தேன். உடனே அசவுகரியமாக உணர்ந்தேன். குளிர்பானத்தில் போதை பொருள் கலந்து இருப்பது தெரிந்தது. பின்னர் இன்னொரு இடத்துக்கு வரச்சொன்னார்கள். அந்த இடத்தில் வெளிச்சம் மோசமாக இருந்தது. எல்லா இடங்களிலும் துணிகள் வீசி எறிந்த நிலையில் கிடந்தன. அங்கு ஒரு பெண் குடிபோதையில் மயங்கி கிடப்பதையும் பார்த்தேன். ஒருவன் என்னிடம் வந்து ஆண் நண்பரை ஏன் அழைத்து வந்தாய் என்று கத்தினான். நிலைமை எனக்கு புரிந்தது. அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டேன்'' என்றார். இது பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com