ஹாலிவுட்டில் அறிமுகமாகும் சூர்யா பட நடிகை


Disha Patani is set for her Hollywood debut
x

புகைப்படம் ஒன்று வெளியாகி திஷா பதானி ஹாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

சென்னை,

பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் கடந்த ஆண்டு 3 படங்களில் நடித்திருந்தார். அதன்படி, பிரபாசுடன் கல்கி 2898 ஏடி, சூர்யாவுடன் கங்குவா மற்றும் சித்தார்த் மல்கோத்ராவுடன் யோதா ஆகிய படங்கள் ஆகும்.

தற்போது, இவர் பாலிவுட்டில் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், புகைப்படம் ஒன்று வெளியாகி திஷா பதானி ஹாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி, பாஸ்ட் அண்ட் பியூரியஸ்" நடிகர் டைரஸ் கிப்சன் மற்றும் நடிகர் ஹாரி குட்வின்ஸுடன் திஷா பதானி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஹாலிவுட் வெப் தொடர் ஒன்றில் திஷா பதானி நடித்து வருவதாக தெரிகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில், தற்போது திஷா பதானியும் நடிக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.


Next Story