

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் பாலிவுட் நாயகி திஷா பதானி. இவர் நடிகர் ஜாக்கி ஷெராபின் மகன் டைகர் ஷெராபை காதலித்து வந்தார். ஆனால், இப்போது இருவரும் பிரேக்கப் செய்த நிலையில் வெளிநாட்டு மாடலான அலெக்ஸாண்டர் என்பவரை டேட் செய்து வருகிறார் திஷா.
தனது தோழி மற்றும் அலெக்ஸாண்டருடன் சமீபத்தில் வெளியே சென்றிருக்கிறார் திஷா. அது தொடர்பான வீடியோ வெளியான போது அலெக்ஸ் கையில் இருந்த டாட்டூ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது 'திஷாவின் டாட்டூவா?' எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
மேலும், இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் நெட்டிசன்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏடி' படத்திலும் நடித்துள்ளார் திஷா.
பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் திஷா.