ஒரே படத்தில் 2 சிறப்பு பாடலுக்கு நடனமாடும் திஷா பதானி?


Disha Patani to dance 2 special songs in shahid kapoor Film?
x
தினத்தந்தி 2 July 2025 5:55 PM IST (Updated: 2 July 2025 6:26 PM IST)
t-max-icont-min-icon

ஷாஹித் கபூருடன் முதல் முறையாக திஷா பதானிஇணைந்திருக்கிறார்.

மும்பை,

இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான 'தேவா' படத்தில் கடைசியாக நடித்திருந்த ஷாஹித் கபூர், தற்போது இயக்குனர் விஷால் பரத்வாஜுடன் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

திரிப்தி டிம்ரி கதாநாயகியாக நடிக்கும் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வருகிற டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகை திஷா பதானி இணைந்திருக்கிறார். இதனை இயக்குனர் விஷால் பரத்வாஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் அவர் 2 சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முதல் முறையாக திஷா பதானி , ஷாஹித் கபூருடன் இணைந்திருப்பது, ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

1 More update

Next Story