மாவட்ட கலெக்டர் அனுமதி..! மீண்டும் தொடங்கியது 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு

'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது
மாவட்ட கலெக்டர் அனுமதி..! மீண்டும் தொடங்கியது 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு
Published on

தென்காசி,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த பகுதியில் அதிக சத்தத்துடன் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்கிய போது அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு குண்டுவெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த படப்பிடிப்பிற்கான உரிய அனுமதியை சம்பந்தப்பட்ட துறையினரிடம் படக்குழுவினர் முறையாக பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று குண்டுவெடுப்பு காட்சி படமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார்

இந்த நிலையில் தற்போது உரிய அனுமதி பெற்று மாவட்ட கலெக்டரிடம் சான்றிதழ்களை படக்குழு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் படப்பிடிப்புக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு இன்று அதே இடத்தில் தொடங்கியுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com