மோகன்லால் 360: படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

நடிகர் மோகன்லாலின் 360-வது படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
மோகன்லால் 360: படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
Published on

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'நெரு' திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இதற்கடுத்து வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல நடிகர் மோகன்லாலின் 360-வது படத்தை, 'சவுதி வெள்ளக்கா' பட இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக எல்360 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார்.

1985-ல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து 'அவிடத்தி போலே இவிடேயும்' என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004-ல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 56ஆவது முறையாக இணைந்து நடிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் வீடியோவை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுமென இயக்குனர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com