"சிலர் பணத்தை விரும்புகிறார்கள், சிலர் புகழைத் தேடுகிறார்கள், ஆனால் ...- நடிகை திவி


Divi Vadthya seeks love, not money or fame
x
தினத்தந்தி 17 May 2025 11:52 AM IST (Updated: 17 May 2025 12:39 PM IST)
t-max-icont-min-icon

"புஷ்பா 2" மற்றும் "டாக்கு மகாராஜ்" போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை திவி வாத்யா

சென்னை,

"புஷ்பா 2" மற்றும் "டாக்கு மகாராஜ்" போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகை திவி வாத்யா , மக்கள் எப்போதும் முழுமையாக திருப்தி அடையமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "மக்கள் எப்போதும் முழுமையாக திருப்தி அடைவதில்லை. நமக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது, பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், அவற்றை ஒரு சிட்டிகை உப்புபோல எடுத்துக்கொண்டு முன்னேறவேண்டும். சிலர் பணத்தை விரும்புகிறார்கள், சிலர் புகழைத் தேடுகிறார்கள், சிலர் நட்சத்திர அந்தஸ்தை துரத்துகிறார்கள், ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு, அன்புதான் தேவை.

ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அதே சமயத்தில் அந்த பயணத்தில் மகிழ்ச்சியை காண மறக்காமலும் இருக்க வேண்டும் ' என்றார்.

நடிகை திவி, தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு தனது எண்ணங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களுடன் பகிர்ந்த இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story