விவாகரத்து? - சொல்லாமல் புரிய வைத்த ஹன்சிகா


divorce - hansika hinted without saying it directly
x
தினத்தந்தி 6 Aug 2025 3:19 PM IST (Updated: 6 Aug 2025 4:21 PM IST)
t-max-icont-min-icon

ஹன்சிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிகிறது.

சென்னை

ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தில் தற்போது முக்கிய செய்தியாக இருப்பதுதான் நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து தகவல். ஹன்சிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி இருக்கும்நிலையில், விவாகரத்து உறுதிதான் என்பதை சொல்லாமல் புரிய வைத்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

நடிகை ஹன்சிகா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி சோஹைல் கட்டாரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சோஹைல் , ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி பஜாஜின் முன்னாள் கணவர் ஆவார்.

ரிங்கி - சோஹைல் திருமணத்தில அப்போது ஹன்சிகா கலந்துகொண்டு எடுத்த புகைப்படங்கள் ஹன்சிகாவின் திருமணத்தின்போது வைரலாக பரவியது. இந்நிலையில் திருமணமாகி 3 வருடங்களுக்குள்ளாகவே தனது கணவரை அவர் பிரிந்துவிட்டதாக பேசப்பட்டு வரும் தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 More update

Next Story