3 முறை விவாகரத்து, நடிகையுடன் காதல்; சொந்த வாழ்க்கையை படமாக எடுத்த நடிகர்

தனது சொந்த சர்ச்சை காதல் விஷயங்களை மையமாக வைத்து நரேஷ் மல்லி பெள்ளி என்ற படத்தை எடுத்து வருகிறார் நரேஷ்.
3 முறை விவாகரத்து, நடிகையுடன் காதல்; சொந்த வாழ்க்கையை படமாக எடுத்த நடிகர்
Published on

தமிழில் எலந்த பழம் பாடல் மூலம் பிரபலமான மறைந்த நடிகை விஜய நிர்மலாவின் மகனும், மூத்த தெலுங்கு நடிகருமான நரேஷ் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று 3-வதாக ரம்யா என்பவரை மணந்தார். பின்னர் ரம்யாவையும் விவாகரத்து செய்து விட்டு கன்னட நடிகை பவித்ரா லோகேஷை காதலித்து வருகிறார். இவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

நரேசுக்கு 60 வயது ஆகிறது. பவித்ரா லோகேசுக்கு 44 வயது. இவர்கள் இருவரும் ஓட்டல் அறையில் ஒன்றாக இருந்தபோது நரேசின் முன்னாள் மனைவி ரம்யா செருப்பால் அடிக்கப்பாய்ந்த சம்பவம் பரபரப்பானது. நரேசுக்கு ரூ.1,500 கோடி சொத்துகள் உள்ளன என்றும், அதை அபகரிக்கவே பவித்ரா காதலிக்கிறார் என்றும் ரம்யா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் தனது சொந்த சர்ச்சை காதல் விஷயங்களை மையமாக வைத்து நரேஷ் மல்லி பெள்ளி (மீண்டும் திருமணம்) என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் நரேசும், பவித்ராவும் ஜோடியாக நடிக்கின்றனர். நரேசின் தந்தையும், மறைந்த தெலுங்கு நடிகருமான கிருஷ்ணா கதாபாத்திரத்தில் சரத்பாபுவும், நடிகை விஜயநிர்மலா வேடத்தில் ஜெயசுதாவும் நடித்துள்ளனர்.

நரேஷ் கூறும்போது, "பவித்ரா லோகேசுடன் எனது இதயம் சங்கமம் ஆகிவிட்டது. எங்களுக்கு திருமணம் நடந்த மாதிரி உணர்கிறோம். நான் சொந்த வாழ்க்கையில் சில கஷ்டங்களை சந்தித்தேன். அதை படத்தில் சொல்லி இருக்கிறேன்'' என்றார்.

3-வது மனைவியை வில்லியாக சித்தரித்து பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த படத்தை எடுத்து இருப்பதாக வலைத்தளத்தில் பலர் பேசி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com